மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் உள்ள பழங்குடி இருளர் மக்கள் 250 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மதுராந்தகம் பஜார் வீதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் ஊர்வலமாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். பின்னர், அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உடனடியாக பழங்குடி இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக குடியிருந்து பட்டா இல்லாமல் அவதிப்படும் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியும் பட்டா வழங்கவில்லை எனவும் உடனடியாக பட்டா மற்றும் இலவச வீடு வழங்க வேண்டுமென வருவாய் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர். இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.