அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அதிமுக சம்பந்தமாக ஏற்கனவே 5 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதிமுக தரப்பில் அவசர செயற்குழு கூட்டப்பட்டது எந்த நோக்கத்திற்காக என்பதை, அதனை ஏற்பாடு செய்தவரிடம் தான் கேட்க வேண்டும்’ என்றார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி ஞாபக சக்தியில் ராஜாஜிக்கு நிகரானவர் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது குறித்து கேட்டபோது, ‘‘இதை நீங்களே சிரித்துக்கொண்டுதான் கேட்கிறீர்கள்’’ என்று பதில் அளித்த ஓபிஎஸ் சிரித்துக்கொண்டே புறப்பட்டுச் சென்றார். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவால் அதிமுக வேட்டி, கொடியை பயன்படுத்தாமல் பாஜவுடன் கூட்டணியில் பயணிக்கும் ஓபிஎஸ் அதிமுக செயற்குழு கூட்டம் குறித்து கேள்வி எழுப்பியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.