லண்டன்: இங்கிலாந்தில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய இந்திய வம்சாவளி நபருக்கு ரூ7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்தீப் சிங் லண்டனின் பில்ஸ்டன் நகர் வால்ஸ்டீரிட்டில் உள்ள சாத்தா ஃப்ரெஷ் ஃபுட் லிமிடெட்டின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். உணவு மற்றும் சுகாதார அதிகாரிகள் கடந்த ஆண்டு இந்த கடையில் நடத்திய சோதனையின்போது உணவு பொருட்கள் வைக்கும் அலமாரிகள், உணவு சேமிக்கு கிடங்குகளில் எலிகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கில் வால்வர்ஹாம்ப்டன் நீதிமன்றம் சுகாதார விதிகளை பின்பற்ற தவறிய குற்றச்சாட்டில் மன்தீப் சிங்குக்கு ரூ7 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.