வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகு துறைமுகம் அருகே கடற்கரையில் இரண்டு பிளாஸ்டிக் டப்பாக்கள் மர்மமான முறையில் நேற்று கரை ஒதுங்கி இருந்தது. இதனை பார்த்த மீனவர்கள், வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் இருந்தது மெத்த பெட்டமைன் எனும் போதை பொருள் என்பதும், இதன் மதிப்பு சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் என தெரிய வந்தது. இதனையடுத்து போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை இலங்கைக்கு படகில் கடத்தும் போது தவறி விழுந்ததா என்பது குறித்து வேதாரண்யம் கியூ பிரிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.