சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இன்றி வாடிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்குக என ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு தரப்படும் என்பது போதுமானது அல்ல என்று கூறியுள்ளார். நீர் இன்றி 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு ஆன நிலையில் 40,000 ஏக்கருக்கு மட்டுமே இழப்பீடு அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல எனவும் கூறியுள்ளார்.