பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 65 ஆண்டுகளாக ரூ.10 மட்டும் பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக காலமானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களையும் பார்த்துள்ளார்.
பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் ரத்னம் 1957ல் மருத்துவ பணி தொடங்கும் போது வாங்கிய பீஸ் ரூ.2. 1997- க்கு பிறகு ரூ 5. 2007க்கு பிறகு இன்று வரை ரூ 10 மட்டுமே… இதுவரை பட்டுக்கோட்டையில் பார்த்த பிரசவம் 65,000 தமிழ்நாட்டில் அதிக பிரசவம் பார்த்த ஆண் டாக்டர் இவர்தான். தன் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு 3 மாத வாடகை 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளார்
கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் படும் சிரமம் உணர்ந்து இந்த உதவி செய்ததாக சொல்லும் இவர் பல வருடமாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார். இவர் பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் எனவும் அடைமொழியுடன் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார். அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களையும் பார்த்துள்ளார். வெறும் பத்து ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு ரத்தினம் பிள்ளை சிகிச்சை வழங்கி வந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார்.