Sunday, June 15, 2025
Home செய்திகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் ஜொலிக்கும் பட்டாடைகட்டி ஊராட்சி

பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் ஜொலிக்கும் பட்டாடைகட்டி ஊராட்சி

by Lakshmipathi

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட பட்டாடைகட்டி ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊராட்சி நிதியின் மூலமும், சங்கரன்கோவில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் மூலமும் இப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

பட்டாடைகட்டி ஊராட்சி சர்க்கரைகுளத்தில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.1 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கீழத்தெரு, மேலத்தெருவில் ரூ.8 லட்சத்தில் வீடுகளுக்கு பைப் லைன் விரிவுப்படுத்துதல் பணி, ரூ.4 லட்சத்தில் வாறுகால், ரூ.7.43 லட்சத்தில் சமையல்கூடம், ரூ.7.89 லட்சத்தில் பள்ளி சுற்றுச்சுவர், ரூ.9 லட்சத்தில் மயானத்தில் சாலை, ரூ.2 லட்சத்தில் மெயின்ரோட்டில் வாறுகால் உறிஞ்சுகுழி, வென்றிலிங்கபுரத்தில் ரூ.36.17 லட்சத்தில் பள்ளி சுற்றுச்சுவர், ரூ.70 லட்சத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 மாடி வகுப்பறை, ரூ.34 லட்சத்தில் ஆரம்பப்பள்ளியில் 4 வகுப்பறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

வென்றிலிங்கபுரம் முருகன் கோயிலில் ரூ.7 லட்சத்தில் சிமெண்ட் சாலை, அம்சுத்தெருவில் ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை, ரூ.4.60 லட்சத்தில் மேலத்தெரு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.4.74 லட்சத்தில் சிமெண்ட் சாலை, கற்குவேல் அய்யனார் கோவில் தெருவில் ரூ.2 லட்சத்தில் வாறுகால், மாரியம்மன் கோயில் அருகே, விஏஓ அலுவலகம், ரூ.2 லட்சத்தில் வாறுகால், 3.22 லட்சத்தில் விஏஓ அலுவலகம் பேவர்பிளாக், வரிவசூல் மையம் பராமரிப்பு பணி, நூலகம், அங்கன்வாடி தெருவில் ரூ.4.75 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வாத்தியார் வீட்டுத்தெருவில் ரூ.2 லட்சத்தில் வாறுகால், மெயின்ரோடு மேல்புறம் ரூ.4.75 லட்சத்தில் வாறுகால், மேற்குதெருவில் ரூ.4.04 லட்சத்தில் சிமெண்ட் சாலை, சிங்கத்துக்குளம் ஊரணியில் ரூ.6 லட்சத்தில் சுற்றுச்சுவர், பள்ளிக்கூடம், மயானம், அசோக் வீட்டு தெரு, காலனி தெருவில் ரூ.2 லட்சத்தில் பைப் லைன் விரிவுபடுத்தி நல்லி அமைக்கும் பணி, விஜயா வீட்டு தெரு, மெம்பர் ரமேஷ் தெருவில் ரூ.1.80 லட்சத்தில் சாலை, தர்மத்தூரணியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம், தெற்கு ஊரணி முதல் ரூ.6 லட்சத்தில் வாறுகால்,இந்திரா காலனியில் ரூ.5.25 லட்சத்தில் சிமெண்ட் சாலை,

சர்ச் தெரு, வடக்குத்தெருவில் ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை, ரூ.7.50 லட்சத்தில் பஸ்நிலையம், ஆட்கொண்டார்குளம் செல்லும் சாலையில் ரூ.3 லட்சத்தில் பைப் லைன் மற்றும் மோட்டார், கருப்பசாமி கோயில் தெருவில் ரூ.2.35 லட்சத்தில் பேவர்பிளாக், இந்திரா காலனி தெற்கில் ரூ.6.50 லட்சத்தில் பைப்லைன், வீட்டு லைன் விரிவுபடுத்தும் பணி, நடுவக்குறிச்சி மெயின்ரோட்டில் ரூ.1.25 லட்சத்தில் பைப் லைன் விரிவுப்படுத்தும் பணி, புதுகிராமம் செல்லும் சாலையில் ரூ.2 லட்சத்தில் வாறுகால் உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டுள்ளது.

பட்டாடைக்கட்டி கிராமத்தில் ரூ.3.75 லட்சத்தில் புதிய மோட்டார் பைப்லைன், வடக்கு பட்டாடைக்கட்டியில் ரூ.8 லட்சத்தில் ஊரணி பராமரிப்பு பணி, ரூ.85 ஆயிரத்தில் கிணறு மூடி அமைத்தல், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.4.90 லட்சத்தில் சிமெண்ட் சாலை, மாணவர் கழிப்பறை அமைக்கும் பணி, ரூ.1 லட்சத்தில் வாறுகால், தெற்கு பட்டாடைக்கட்டியில் ரூ.2 லட்சத்தில் வாறுகால், உறிஞ்சுகுழாய் பணி, புதுகிராமம் தெற்கு தெருவில் ரூ.59 ஆயிரத்தில் பைப்லைன், சந்திரகிரியில் ரூ.75 ஆயிரத்தில் பைப் விரிவுபடுத்துதல் பணி, தட்டான்குளம் பிள்ளையார் கோயில் ரூ.3.75 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரூ.85 லட்சத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அனைத்து கிராமங்களிற்கும் குறிப்பிட்ட நேரத்தில் பைப்லைன், தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு 90% புதிய மின்விளக்குகள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவராக சுமதி கனகவேல், துணைத் தலைவராக வடகாசி, வார்டு உறுப்பினர்களாக இந்திராணி, முருகேஸ்வரி, மகேஸ், பரதன், நித்யா,சுந்தர்ராஜ், கணேசன், சந்தனமாரி ஆகியோர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi