Tuesday, February 27, 2024
Home » பாட்னாவில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் போதை மாத்திரை கடத்திய 2 பேர் பிடிபட்டனர்: 1500 மாத்திரைகள் பறிமுதல்

பாட்னாவில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் போதை மாத்திரை கடத்திய 2 பேர் பிடிபட்டனர்: 1500 மாத்திரைகள் பறிமுதல்

by Suresh

பெரம்பூர்: வலி நிவாரண மாத்திரைகளை மர்ம நபர்கள் சிலர் ஆன்லைன் மூலமும் வட மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் வாங்கி அதனை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது கூரியர் மூலம் வரும் மாத்திரைகளை போலீசார் பிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது பிளாக் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, பாட்னாவில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் மாதவரம் மில்க் காலனி பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு குறிப்பிட்ட அந்த கூரியர் அனுப்பப்பட வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

பார்சலில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது பார்சலை வீட்டிற்கு அனுப்ப வேண்டாம். நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுத்தால் போதும் என கூறியுள்ளனர். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை அவர்கள் தேர்வு செய்து, அதனை கூரியர் நிறுவன ஊழியரிடம் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கூரியர் நிறுவன ஊழியர் இதுகுறித்து கொடுங்கையர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் தெரிவித்தார். உடனே, அவரது தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட அந்த பார்சலை எடுத்து பிரித்துப் பார்த்தபோது, அதில் 1500 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கூரியர் நிறுவன ஊழியரை வைத்து, பார்சல் கொடுப்பது போல சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில், மாதவரம் மில்க் காலனி கணபதி நகர் 3வது தெருவை சேர்ந்த நரேஷ் பிரவீன் (24), அதே பகுதியை சேர்ந்த ராஜாராம் (24) என்பதும், இவர்கள் பாட்னாவில் இருந்து ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை தனது கொடுங்கையூர் பகுதியில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 1500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

14 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi