சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116வது பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி 30ம் தேதி நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார். அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116வது பிறந்த நாள் மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வருகிற 30ம் தேதி (திங்கள்) காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும்.