ராமநாதபுரம்: பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் முன்பு ரூ.1.55கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது. நினைவிடம் முன்பு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் தங்க கட்டிடம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement


