சென்னை: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி, கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்ணை கணவன் உடமையாக கருதும் சமூக மனப்பான்மையே பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது. பிரச்சினை உள்ள நிலையில், கணவரிடம் இருந்து மனைவி கையெழுத்து பெற்று வருவது இயலாது. திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை. கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். மேலும் மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலித்து 4 வாரங்களில் பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி, கையெழுத்து தேவையில்லை: ஐகோர்ட் உத்தரவு
0
previous post