சென்னை: சமூக நலக்கூடங்கள், கலையரங்குகளுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அலுவலகங்கள் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் நிலையில் திருத்தம் செய்து புதிய தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சமுதாய நலக்கூடங்களை எளிய முறையில் பொதுமக்கள் முன்பதிவு செய்ய தீர்மானம் வழிவகை செய்துள்ளது.