சென்னை: சென்னை மூர் மார்க்கெட், திருவள்ளூர், புளியமங்கலம் ரயில் நிலையங்களில் பயணிகள் எடுத்துச் சென்ற பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியமங்கலம் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.15,000 மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மூர் மார்கெட் ரயில் நிலைய வளாகத்தில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பயணியிடம் ரூ. 1500 மதிப்புள்ள பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.