சென்னை: 159 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலையால் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே ஏர் இந்தியா விமானம் திரும்பியதால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். ஆத்திரமடைந்த பயணிகள் ஏர் இந்தியா கவுண்டரை சூழ்ந்து கொண்டு சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.