சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுக கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்ட அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கழக உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அறிக்கை அளிப்பதற்காக, `கள ஆய்வு குழு’ அமைக்கப்படுகிறது.
அதன்படி, கே.பி. முனுசாமி (துணை பொதுச்செயலாளர்), திண்டுக்கல் சீனிவாசன் (பொருளாளர்), நத்தம் இரா.விசுவநாதன் (துணை பொதுச்செயலாளர்), பி.தங்கமணி (அமைப்பு செயலாளர்), எஸ்.பி.வேலுமணி (தலைமை நிலைய செயலாளர்), டி.ஜெயக்குமார் (அமைப்பு செயலாளர்), சி.வி.சண்முகம் (அமைப்பு செயலாளர்), செம்மலை (அமைப்பு செயலாளர்), பா.வளர்மதி (அதிமுக மகளிர் அணி செயலாளர்), வரகூர் அ.அருணாசலம் (அமைப்பு செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிமுகு அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை, மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் முழு கவனத்துடன் செய்திட வேண்டும்.