டெல்லி : பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு மீண்டும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 10 முறை பரோல் வழங்கப்பட்டு 261 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார். நீதிமன்றத்தின் அனுமதியின்றி இவருக்கு பரோல் வழங்கக்கூடாது என ஹரியானா சிறை துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.