சென்னை: மக்கள் நீதி மையத்தின் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆ.அருணாசலம், துணை தலவைர் ஆர்.தங்கவேலு, புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சந்திரமோகன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கமல்ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூட்டணி குறித்து விரைவில் தெரிவி க்கப்படும் என்றார். இன்று காலை தமிழ்நாடு செயற்குழு கூட்டம் நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
144
previous post