தியோகர்: வரும் தேர்தலில் மோடியை மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் தாம் கோயிலில் தரிசித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாட்டு நடப்புகள் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நாட்டில் பணவீக்கமும், வேலையின்மையும் உச்சத்தில் உள்ளன. மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி மீண்டும் பொய் பேச தொடங்கி உள்ளார். இதனால் வரும் தேர்தலில் அவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார். தேர்தலையொட்டி, பிரதமர் மோடி காஸ் விலையை குறைத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இந்த விலை குறைப்பு அவருடைய பணத்தில் இருந்து வந்தது அல்ல. அது மக்களின் வரிப் பணம். பிரதமரா சம்பாதித்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.