Friday, April 12, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக: பேச்சுவார்த்தை தொடங்கினார் பிரேமலதா

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக: பேச்சுவார்த்தை தொடங்கினார் பிரேமலதா

by Karthik Yash

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ தனித்தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதிமுக தலைமை, மறைமுகமாக பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி அறிவிப்போம் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் நேற்று மாலை திடீரென சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வீட்டுக்கு சென்றனர். அவர்களை பிரேமலதா சால்வை, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதிலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுநடத்தினர். அப்போது தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உடனிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் 40 நிமிடம் நீடித்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் மற்றும் 50 ஸ்வீட் பாக்ஸ் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் 5 நாடாளுமன்ற சீட், ஸ்வீட் பாக்ஸ் தர அதிமுக ஒத்துக் கொண்டுள்ளது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்க முடியாது என்று எடப்பாடி தரப்பில் இருந்து திட்டவட்டமாக கூறி விட்டதாகவும், தேமுதிக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரேமலதாவுடன் சந்திப்புக்கு பிறகு எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் இல்லத்துக்கு வந்து, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இரண்டு பக்கமும் பேச குழு போடப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும். நேரடியாக வந்து இரண்டு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுகிறோம் என்றால், கூட்டணி உறுதி என்றுதானே அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

nineteen − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi