Saturday, April 20, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியல்: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்; 33 தொகுதிகளில் அதிமுக போட்டி; தேமுதிக 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐக்கு தலா ஒரு தொகுதி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியல்: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்; 33 தொகுதிகளில் அதிமுக போட்டி; தேமுதிக 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐக்கு தலா ஒரு தொகுதி

by Karthik Yash

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 16 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த பிறகு அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது இரு கட்சிகளிலும் கூட்டணியாக சேர்ந்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதில் அதிமுக கூட்டணியில் பாமகவை இணைக்க கடந்த திங்கட்கிழமை வரை பேச்சுவார்த்தை நடந்தது. கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜ கூட்டணிக்கு பாமக சென்று விட்டது. இதனால் நேற்று முன்தினமே தேமுதிகவுடன் கூட்டணியை அதிமுக இறுதி செய்தது.

அதன்படி தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. இதனால் தமிழகம் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கியதுபோக மீதம் உள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதில் முதல் கட்டமாக 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் வெளியிட்டார்.

அதன்படி, தென்சென்னை – ஜெயவர்த்தனன், வடசென்னை – ராயபுரம் ஆர்.மனோ, காஞ்சிபுரம் (தனி) – இ.ராஜசேகர், ஆரணி – ஜி.வி.கஜேந்திரன், விழுப்புரம் (தனி) – ஜெ.பாக்கியராஜ், மதுரை – பி.சரவணன், சேலம் – பி.விக்னேஷ், ஈரோடு – ஆற்றல் அசோக்குமார், அரக்கோணம் – ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி – வி.ஜெயபிரகாஷ் நாமக்கல் – எஸ்.தமிழ்மணி, கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல், நாகப்பட்டினம் (தனி) – ஜி.சுர்ஜித் சிங்கர், தேனி – வி.டி.நாராயணசாமி, சிதம்பரம் (தனி) – எம்.சந்திரகாசன், ராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளும், புதிய தமிழகத்திற்கு தென்காசி, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி நேற்று ஒதுக்கப்பட்டது. இதனால், 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதில் 16 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட அடுத்த பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

19 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi