Sunday, April 14, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக-தேமுதிக உடன்பாடு: 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக-தேமுதிக உடன்பாடு: 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது

by Karthik Yash

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு எடப்பாடியும் பிரேமலதாவும் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சேர்வதற்கான பேச்சுவார்த்ைத 3 கட்டங்களாக நடைபெற்றது. ஆனாலும், தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக வழங்காததால் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக திடீரென பாஜ பக்கம் தாவியது.

இதையடுத்து, தேமுதிகவையாவது தக்க வைக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டது. இதையடுத்து ஒருவழியாக அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை கையெழுத்திட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறும்போது, அதிமுகவும் – தேமுதிகவும் கூட்டணி அமைத்து தமிழகத்திலும், புதுச்சேரியில் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக – தேமுதிக இடையே இன்று ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி 5 தாகுதிகள் ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1) திருவள்ளூர் (தனி), 2) மத்திய சென்னை 3) கடலூர், 4) தஞ்சாவூர், 5) விருதுநகர் என 5 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்றார்.

இதைத்தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டியில், 2011ல் உருவான ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் உருவாகி இருக்கிறது. அந்த வெற்றி மீண்டும் நிச்சயமாக இந்த தேர்தலிலும், அதற்கு அடுத்து வரப்போகிற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். பல தேர்தல்களை அதிமுகவும், தேமுதிகவும் சந்தித்துள்ளது. எனவே எத்தனை போட்டிகள் வந்தாலும் அதை எதிர்த்து, சவால்களை சந்தித்து மாபெரும் வெற்றியை இந்த கூட்டணி அமைக்கும்.
எண்ணிக்கை என்பது பிரச்னை இல்லை. யார் யார் கூட்டணி சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

எனவே, இது ஒரு ராசியான, இயற்கையான கூட்டணி. மீண்டும் 2011ம் ஆண்டு வரலாறு தொடரும். நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நட்புடன்தான் இருந்தோம். ஆனால், எங்கள் மாவட்ட செயலாளர்கள் இந்த தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். முதலில் எங்களை அணுகியதும் அதிமுக தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகள். இது தேர்தல், எந்த கூட்டணி வெற்றிபெறும் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள். எடப்பாடி பழனிசாமி: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். விளவங்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

* 5 நட்சத்திர ஓட்டல் இல்லை
2016, 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இடம்பெற்றது. அப்போது, சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர ஓட்டலில் வைத்துதான் கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், நேற்று முதன்முறையாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வந்து கையெழுத்திட்டார்.

* இன்று முக்கிய அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கேட்கிறீர்கள். ஒரு மாதம் பொறுத்திருந்தீர்கள். நாளை (இன்று) ஒரு நல்ல செய்தி தேமுதிக தலைமை கழகத்தில் அறிவிக்கப்படும். இன்று நான் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். நாளை (இன்று) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்து, இந்த கூட்டணி ஒரு மாபெரும் வெற்றி கூட்டணி என்பதை முதலில் நிரூபித்து, நாளைக்கு எங்கள் தலைமை கழகத்தில் வைத்து மிகப்பெரிய செய்தியை அறிவிப்போம் என்று பிரேமலதா கூறினார்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi