சென்னை: நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும்; அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தயாராக வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.