டெல்லி: மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் மனு அளித்துள்ளனர். மணிப்பூர் சென்று வந்த I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள், அங்குள்ள நிலவரம் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கினர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பின் I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. மணிப்பூர் விவாகரத்துக்கு தீர்வுகாண குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம். மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடந்த எதிர்க்கட்சிகள் வலிறுத்தி வருகின்றனர். விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடத்த ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மணிப்பூர் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் அமைதியை நிலைநாட்ட குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய, மாநில அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினர்.