சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் வாகனம் நிறுத்த வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து பாழாய் போகிறது. போதிய அளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் வாகனங்கள் திருடு போகும் சம்பவம் நிகழ்கிறது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கடந்த ஜூன் மாதம் அளித்த மனு மீது மெட்ரோ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னையை சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, மனுதாரரின் விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.