டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதிநீக்கப்பட்டது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கமளித்துள்ளார். வினேஷ் போகத்துக்கு, தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தி உள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.