புதுடெல்லி: ஷாருக்கான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ‘பதான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதனால் ரசிகர் முன்பு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது. ஒரு புறம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த படம் 1000 கோடி ரூபாய் மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து அந்த படத்திலும் மாபெரும் வெற்றி கொடுத்தார்.
உலகளவில் இப்படம் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்போது 2 படங்களில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஷாருக்கானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் உருவம் பதித்த நாணயத்தை பாரிஸில் இருக்கும் க்ரெவின் மியூஸியம் வெளியிட்டிருக்கிறது. இதற்கு திரையுலகத்தில் இருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் இந்த பெருமையை பெரும் முதல் நடிகர் என்ற கவுரவம் ஷாருக்கானுக்கு கிடைத்துள்ளது.