பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீ. தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர். சரப்ஜோத் சிங் ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 3 (வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மனு பாக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.