பாரிஸ்: பாரிஸ் டைமண்ட் லீக் ஈட்டியெறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா அபாரமாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாரிஸ் டைமண்ட் லீக் ஈட்டியெறிதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 8 ஆண்டுகளுக்கு பின் கலந்து கொண்டார். போட்டியின்போது தன் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா, 88.16 மீட்டர் துாரம் ஈட்டியெறிந்து அசத்தினார். அந்த துாரத்தை மற்ற வீரர்களால் அப்போட்டியின் எந்த சுற்றிலும் எட்டவே முடியவில்லை. ஜெர்மன் வீரர் ஜூலியன் வெபர், 87.88 மீட்டர் துாரம் எறிந்து நெருங்கி வந்தார். அதன் பின் நடந்த சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்தாண்டில் அவர் பெறும் முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் லீக் ஈட்டியெறிதல்: நீரஜ் சோப்ரா சாம்பியன்
0