சென்னை: பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு சரித்திர வெற்றியை பதிவு செய்து நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.