சென்னை: சென்னை பரங்கிமலையில் இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் விமான விபத்து ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஆணைய அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப். வீரர்கள், தீயணைப்பு, மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானது போல் வடிவமைத்து அதற்கு தீ வைத்த நிலையில் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நடைபெற்று வருகிறது. காயமடைந்த பயணிகளை மீட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
சென்னை பரங்கிமலையில் இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் விமான விபத்து ஒத்திகை..!!
0