தேவையானவை:
சதுரமாக 1×1 இஞ்ச் அளவில் நறுக்கிய பரங்கிக்காய் – ¼ கிலோ, ஊறவிட்டு வேகவிட்ட வெள்ளைக் காராமணி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிது,
தேங்காய் – சிறியது 1 (துருவி பால் எடுக்கவும்),
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
குறுமிளகு – 5, உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் பரங்கிக்காய் சேர்த்து உப்பிட்டு வேகவிடவும். வெந்தவுடன் வெந்த வெள்ளைக் காராமணி, கறிவேப்பிலை, தேங்காய்ப்பால், கீறிய பச்சை மிளகாய், குறுமிளகு சேர்த்து லேசாக நுரை வருகையில் தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும். வயிறு, வாய்ப்புண் ஆகியவற்றிற்கு கை கண்ட மருந்து. ருசியும் அபாரம். பண்டிகை நாட்களில் பரங்கி ஓலன் சமைக்காத வீடே கேரளாவில் கிடையாது.