Wednesday, April 17, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவம் இன்று தமிழகம் வருகை: போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவம் இன்று தமிழகம் வருகை: போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

by Ranjith
Published: Last Updated on

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக 15 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று தமிழகம் வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக போலீஸ் அதிகாரிகளான மதுவிலக்கு மற்றும் க்ரைம் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐஜி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களில் மகேஷ்குமார் அகர்வால், ஜெயராம் ஆகியோர் தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆவர். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கி உள்ளனர். அதில் 15 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மார்ச் 1ம் தேதி (இன்று) சென்னை வருகிறார்கள். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகிற 7ம் தேதி வருவார்கள்.

இந்த துணை ராணுவ வீரர்களை அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரங்களில் எந்த மாதிரி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, 25 கம்பெனி வீரர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.
எந்தெந்த பகுதிகள் பதற்றமானவை என்று இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதுகுறித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

* தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வருவது இதுவே முதல்முறை
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் துணை ராணுவ படையினர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பல நாட்களுக்கு பின்னர்தான் வருவார்கள். அவர்கள் தமிழக போலீசாருடன் குறிப்பாக மாவட்ட எஸ்பிக்கள் அலுவலகத்தில் ஆஜராவார்கள். அவர்கள் ரோந்துப் பணியில் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவார்கள். ஆனால் முதல் முறையாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகத்துக்கு 25 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகின்றனர். இதனால் ஒன்றிய அரசு எதற்காக அவர்களை முன் கூட்டியே பாதுகாப்பு பணிக்கு அனுப்புகிறார்கள், அதற்கு என்ன ேதவை தற்போது வந்தது? என்று அரசியல் பார்வையாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

You may also like

Leave a Comment

nineteen + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi