புதுடெல்லி: பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் ஒன்றிய அரசின் கொள்கையின் கீழ், அனைத்து மாநில அரசுகள், மாநில காவல்துறை அமைப்புக்கள் பழுதடைந்த மற்றும் பழைய வாகனங்களை கழித்துக்கட்டிவிட்டு புதிய வாகனங்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி துணை ராணுவ படையான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் ஆகியவற்றில் சுமார் 11000 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் படிப்படியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி நாடு முழுவதும் துணை ராணுவ படைகளில் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலானவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.