பாரீஸ்: பாரீசில் நடைபெறும் பாராலிம்பிக் தொடரில் மேலும் ஒரு தங்கப் -பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. பாராலிம்பிக் தொடர் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தலை 2 -1 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.