பாரிஸ்: பாராலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 2 பதக்கங்களை வென்றனர். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி, மணீஷா இருவரும் பதக்கம் வென்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கம், மணீஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றனர். பாராலிம்பிக் தொடரில் இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.