பிரான்ஸ்: பாரா ஒலிம்பிக் 2024 பெண்களுக்கான 100 மீட்டர் டி35 இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 2024 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. பாரீஸ் பாராலிம்பிக்கில் போட்டியில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்குபெற்றுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன. டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸின் முந்தைய தொடரை ஒப்பிடும்போது, பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு 10 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று 2வது நாளாக நடைபெறும் போட்டியில் இந்தியாவிற்கு ஏற்கனவே 1 வெண்கல பதக்கம் மற்றும் 1 தங்கப்பதக்கம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கிடைத்துள்ளது . இன்று பெண்களுக்கான 100 மீட்டர் டி35 ஒட்டப்பந்தைய இறுதிப் போட்டியில் ப்ரீத்தி பால் 14.31 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்முலம் அவரது தனிப்பட்ட சாதனையாகும். 17வது கோடைகால பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது பதக்கம் ஆகும்.
உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த 24 வயதான தடகள வீராங்கனை, சீன ஜோடியான சியா சோ மற்றும் கியான்கியானுக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சியா 13.58 என்ற மேலாதிக்கப் புள்ளியுடன் மேடையில் முதலிடத்தைப் பிடித்தார், மேலும் Gou 13.74 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ப்ரீத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோபியில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 இல் வெண்கலம் வென்றார், பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு ஹாங்சோவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் இரண்டு பதக்கங்களை தவறவிட்டார், ஆனால் பாரிஸில் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளராக இருந்து வருகிறார்.