டெல்லி: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 25 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 4வது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய பாரா ஆசிய விளையாட்டு வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள் என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர்.
முதல் நாள் (அக்.,23) முடிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றிருந்தனர். 2வது நாளாக இன்றும் (அக்.,24) இந்தியா பதக்கத்தை குவித்து வருகிறது. 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்று அசத்தினார். டி20 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்றார்.
படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான படகுப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுரவ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; “பாரா கேனோ ஆண்கள் VL2 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜேந்திர சிங்கிற்கு வாழ்த்துகள். இந்த சாதனையை இந்தியா பாராட்டுகிறது. இனி வரும் முயற்சிகளுக்கு அனைத்து நல்வாழ்த்துக்கள்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீ-டி20 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீப்திக்கு வாழ்த்துகள். நம் அனைவரையும் பெருமைப்படுத்திய தீப்திக்கு பாராட்டுகள். சிம்ரன் வாட்ஸ்
பெண்களுக்கான 100மீ டி12 போட்டியில். இந்த அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தியாவை பெருமைப்படுத்தியது. முன்னோக்கிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா கேனோ ஆடவர் KL3 நிகழ்வில் அபாரமாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மனீஷ் கவுரவ்க்கு வாழ்த்துகள். இது ஒரு சிறந்த சாதனை” என தெரிவித்துள்ளார். இதுவரை 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 25 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.