மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாரா மெடிக்கல் பணிகளுக்கும், கான்ஸ்டபிள்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
I. பாரா மெடிக்கல்
பணியிடங்கள் விவரம்:
1. SI (Staff Nurse): 14 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4). சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஜெனரல் நர்சிங் பாடத்தில் பட்டம்/டிப்ளமோ படிப்பை முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. ASI (Lab Technician): 38 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-6, ஒபிசி-12, எஸ்டி-4). சம்பளம்: ரூ.29,200- 92,300. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: அறிவியலில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று DMLT படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. ASI (Physiotherapist): 47 இடங்கள் (பொது-19, பொருளாதார பிற்பட்டோர்- 5, ஒபிசி- 12, எஸ்சி-7, எஸ்டி-4). சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 20 முதல் 27க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிசியோதெரபி பாடத்தில் பட்டம்/ டிப்ளமோ படி்பை முடித்து 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.எல்லை பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இதர தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகா, பெங்களூரில் இத் தேர்வுகள் நடத்தப்படும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 81 செ.மீ., அகலமும் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 150 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: எல்லை பாதுகாப்பு படையால் நடத்தப்படும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
கட்டணம்: எஸ்ஐ பணிக்கு ரூ.200/-. ஏஎஸ்ஐ பணிக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டியினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
II. கான்ஸ்டபிள்:
1. Head Constable (Veterinary): 4 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Veterinary Stock Assistant பிரிவில் ஒரு வருட பயிற்சியும் மற்றும் ஒரு வருட பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
2. Constable (Kennel man): 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Veterinary Hospital அல்லது Dispensary பிரிவில் 2 வருட பணி அனுபவம்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதி: உயரம்- பெண்கள்- 150 செ.மீ., ஆண்கள்- 165 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு (சாதாரண நிலையில்) 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ., இருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையில் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.147.20. இதை ஆன்லைனில் செலுத்தவும்.எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் https://rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.06.2024.