கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். கொடிக் கம்பம் நடும் போது உயர் மின்னழுத்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி வெங்கடேசன் உயிரிழந்தார். வெங்கடேசனை காப்பற்ற முயன்ற 5 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.