மும்பை: கர் ஜிம்கானா மேற்கு இந்தியா பில்லியர்ட்ஸ் & ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் 2024 தொடரில் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி இரண்டு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தினார். ஸ்நூக்கர் பைனலில் ரயில்வே வீரர் கமல் சாவ்லாவுடன் மோதிய பங்கஜ் அத்வானி 6-4 என்ற செட் கணக்கில் சுமார் 7 மணி நேரம் போராடி வென்று (11-72, 31-58, 95-40, 52-42, 69-43, 43-74, 22-59, 75-62, 84-58, 58-10) கோப்பையை முத்தமிட்டார். முன்னதாக, பில்லியர்ட்ஸ் பைனலில் அவர் எஸ்.கிருஷ்ணாவை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றி இருந்தார். அத்வானி 27 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.