வேலூர்: வேலூர் அருகே தள்ளுவண்டி கடையில் வாலிபர் வாங்கி சாப்பிட்ட பானிபூரியில் துண்டுபீடி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் பொன்னையில் வடமாநிலத்தவர் ஒருவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று மாலை பொன்னை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர் பானிபூரி மசாலா சாப்பிட சென்றார். உடனே வியாபாரி பானிபூரி மசாலாவை தயாரித்து கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்டுக்கொண்டிருந்த வாலிபர், அதில் துண்டு பீடி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வியாபாரியிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத வடமாநில வியாபாரி, வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.