கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் நமச்சிவாயம். கடந்த 18ம் தேதி வழக்கம்போல் ஊராட்சி பணிகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்குள் உறங்க சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் பூஜை அறையில் உள்ள பீரோ திறப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. உடனே நமச்சிவாயம் கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடியதைப் பார்த்தனர். அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று பிடித்தனர். பின்பு அவரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கீழ் முதலம்பேடு தமிழ் காலனி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் அடைத்தனர்.