மதுரை: நெல்லை நொச்சிகுளம் ஊராட்சி நிதியில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஊராட்சி நிதி பற்றி புகார் வந்தால் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் விசாரணை நடத்தி 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை தெரிவித்தது.
ஊராட்சி நிதியில் மோசடி: ஆட்சியருக்கு கோர்ட் ஆணை
0