மதுரை: ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி மன்ற தலைவர், அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 2021 உள்ளாட்சி தேர்தலில் என்னிடம் தோல்வியடைந்த வரதராஜன், அவரது ஆதரவாளர்கள் என் மீது தாக்குதல் நடத்தியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர் சுமத்திய குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
ஊராட்சி தலைவரை தாக்கிய வழக்கு CBCIDக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளை உத்தரவு
0