மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் மதுராந்தகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஜயகுமார், சந்தோஷ், செந்தில், யுவராஜ், நகர செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமரவேல் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஏழுமலை, அம்பலவாணன், பக்கிரிசாமி, கேசவன், சபரி, காளிதாஸ் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி முகவர்களுக்கு பயிற்சி அளிப்பது, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது, டிசம்பர் மாதம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்திற்கு வருகை தரும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கிளைகள் தோறும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.