பல்லாவரம்: பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரெங்கநாத முதலியார் தெருடகங் டீக்கடை, ஜவுளிக்கடை, செல்போன் கடை, காலணிகள் கடை என்று ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே இந்த சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இங்கு, கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வருகை தரும் வாடிக்கையாளர்கள் ஆகியோர்களின் இருசக்கர வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்கின்றன.
இந்த நிலையில், தற்போது சாலையை ஆக்கிரமித்து துணிக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.