திருப்பூர்: பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லடம் டி.கே.டி. மில் பகுதியில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 26 பேர் கைது
0