திருப்பூர்: பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 8 சவரன் நகை திருடுபோனதாக தகவல் தெரிவித்துள்ளனர். அனைத்து பகுதியிலும் வாகன சோதனை நடைபெறுகிறது.