சென்னை: பல்லடம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து உயிரிழந்த மகாராணி, கிருத்திகா ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். லாரி விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், நாரணாபுரம் கிராமம், திருச்சி -கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நால்ரோடு சந்திப்பில் இன்று (17.6.2025) பிற்பகல் 2.50 மணியளவில் TN09 DT 4353 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில், அருகில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பல்லடம் வட்டம், நாரணாபுரம் கிராமம், அறிவொளி நகரைச் சேர்ந்த திருமதி.மகாராணி (வயது 55) க/பெ.நாகராஜ் மற்றும் திருமதி.கிருத்திகா (வயது 35) க/பெ.(லேட்) செல்வராஜ் ஆகிய இரண்டு பெண்கள் கண்டெய்னரின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.