டெல்அவிவ்:பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர். 1967ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்குப் போரில் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம், காசா உள்ளிட்ட பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது முதல் பாலஸ்தீனியத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மேற்குக்கரை நகரமான வடக்கு ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் முகாம்களில் இருந்த 6 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 30 பேர் கொல்லப்பட்டனர்.